Print this page

மஹிந்தவின் கடிதத்தை நிராகரித்தார் கோத்தா

December 10, 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கையளித்த இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொதுத்தேர்தல்கள் ஆகியன நடத்தப்படவுள்ளன. அதற்கான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, மஹிந்த தேசப்பிரியவின் சேவை, இன்னுமின்னும் தேவையாகும். ஆகவே, அவருடைய இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பில், ஜனாதிபதியின் செயலாளரினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இராஜினாமா கடிதத்தை ஏற்பதற்கு, ஜனாதிபதி மறுத்துவிட்டார் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

Last modified on Saturday, 14 December 2019 01:13