Print this page

மீண்டும், மீண்டும் பல்டி அடிக்கிறார் ரணில்

December 10, 2019

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தற்போது வழங்கியது பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி மாத்திரமே எனவும் கட்சி தலைவர் பதவி தொடர்ச்சியாக தான் தலைமை தங்குவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு காண்பிக்க வேண்டும் எனவும், தேசிய அளவில் அரசியல் தலைவராக அவரது செயல்திறன் கட்சி தலைமைக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிக்கும் என ரணில் விக்கிரமசிங்க மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜே.ஆர். ஜயவர்த்தன , ஆர்.பிரேமதாச ஆகிய தலைவர்களின் பின் தான் ஐக்கிய தேசியக் கட்சியை 25 வருடங்களாக பாதுகாத்து வருவதாக நினைவு படுத்திய ரணில் விக்ரமசிங்க அதை வீணடிக்க இடமளிக்க முடியாது என்றும், அடுத்த தலைவராகும் பொறுப்பை ஏற்கும் திறனை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்..