Print this page

தனி வழியை தளர்த்தியது சவுதி

December 10, 2019

சவுதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஒன்று இருந்தது.

இந்நிலையில், இனி இந்த, தனித்தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்த பல கட்டுபாடுகளையும், குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்தி வருகின்ற நிலையில், அரசின் இந்த முடிவினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மான் இளவரசராக பொறுப்பேற்றபின்னர் நாட்டின் பெண்களுக்கு எதிரான பழமை வாய்ந்த சடங்களை நீக்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக வாகனம் ஒட்டுவதற்கு பெண்களுக்கு சுதந்திரம் அளித்தது மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கினார்.

Last modified on Tuesday, 10 December 2019 02:18