Print this page

“ஸர்பயா” விடுதலை

December 10, 2019

இரண்டு நபர்கள் இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹசித முஹான்திரம் என்ற ´ஸர்பயா´வை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்கிரமசிங்கவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கலவான பிரதேசத்தில் இரண்டு நபர்களை 2009 ஆம் ஆண்டு வாகனத்தில் மோதிய குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இரத்தினபுரி மேல் நீதிமன்றம் ஹசித முஹான்திரத்திற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், குறித்த குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுதலை செய்யுமாறும் கோரி ஹசித மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரதிவாதியை குற்றவாளி என மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பிரதிவாதியை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.