Print this page

அகதிகளின் வாழ்வில் மண் தூவினார் நித்தியானந்த்

December 10, 2019

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாதென வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் குடியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுமா என, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார்,  லோக்சபாவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுதொடர்பில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளிக்கையில், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது என்றார்.

மேலும், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்றும் நித்தியானந்தா ராய் திட்டவட்டமாக கூறினார்.