Print this page

ஏப்​ரல் தாக்குதல் 22 ஆம் திகதி இடைக்கால அறிக்கை

December 12, 2019

 

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆ​ணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, எதிர்வரும் 22 ஆம் திகதி, ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாதம் தொடர்பிலான விசேட நிபுணர், பேராசிரியர் ரொஹான் குணரத்ன, ஆணைக்குழு நேற்று (10)  முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் அழைப்பிணை ஏற்று அவர் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளார். அத்துடன், இதுவரை 20துக்கும் அதிகமானோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

கொழும்பு பேராயர் பேரருட்திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கடந்த வாரம் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், ஆணைக்குழுவுக்கு 106 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், சாட்சி விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.