Print this page

வடக்குக்கு பெண் ஆளுநர்

December 12, 2019

 

வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிப்பது குறித்து அரச உயர்மட்டம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.

இப்போது சுகாதார அமைச்சின் செயலாளராக பணியாற்றும் அவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமித்து அமைச்சுக்கு வேறோரு செயலாளரை நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.