Print this page

சேனா தாக்கம் குறைவடைந்து வருகின்றது

கடந்த சில நாட்களாக அதிகளவில் காணப்பட்ட சேனா படைப்புழுக்களினால் ஏற்படும் பாதிப்பு தற்போது குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் டபிள்யு.எம்.டபிள்யு வீரகோன் இதனை கூறியிருக்கின்றார்.

சேனா படைப்புழுவினை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை காணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

குருநாகல் மாவட்டத்தில், சேனா படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், அம்பாறை, மொனராகலை மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சோளப் பயிர்ச் செய்கையில் பாரியளவு தாக்கம் செலுத்தியுள்ள இந்த படைப்புழுக்கள், தற்போது நெல், குரக்கன் உள்ளிட்ட மேலும் சில பயிர்ச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Last modified on Saturday, 26 January 2019 02:45