Print this page

நீதிமன்றத்தை நாடுகிறது அரசாங்கம்

December 13, 2019

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தனது பொறுப்பின் கீழ் வைத்திருக்க முடியுமா? என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் கருத்து கேட்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அறியமுடிகின்றது. 

19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஜனாபதிக்கு எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்க முடியாது. எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்றவகையில், படையினருக்கு கட்டளையிடும் அதிகாரம் உள்ளது. அத்துடன், சட்டம், ஒழுங்கை அமுல்படுத்தும் அதிகாரமும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே உள்ளது. 

அவ்வாறான நிலைமையில், பாதுகாப்பு அமைச்சை வேறொரு அமைச்சின் கீழ் கொண்டுவருவது பிரச்சினைக்குரிய விடயமாகும். ஆகையால், 19ஆவது திருத்தம் தெளிவின்றி உள்ளதென தெரிவித்தே, உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.