Print this page

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

December 18, 2019

ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் குமாரவை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாமல் குமார, ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் ஆக பணியாற்றினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதியாக இருந்தபோது, அவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்தொன்றை தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.