Print this page

என்ன ஒரு அவதானிப்பு

December 18, 2019

நாரஹேன் பிட்டியிலுள்ள சிறப்பு பொருளாதார நிலையத்துக்கு திடிரென சென்றிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை அவதானித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (18) மாலை சுமார் 07.30 மணியளவில் நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி அவர்கள் இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.

அங்கிருந்தவாறே நிதியமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி அவர்கள், வரிச் சலுகைகளின் நன்மைகள் உரிய முறையில் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் கிடைக்கின்றதா என்பது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

Last modified on Wednesday, 18 December 2019 16:02