Print this page

வௌ்ளைவான் சாரதிகள் கக்கினர்- ராஜித கைது

December 18, 2019

முன்னாள் ராஜித சேனாரத்னவே, தங்களை இவ்வாறு கூற சொன்னார் என, வெள்ளை வான் சாரதிகள் என தங்கள் இருவரையும் அடையாளப்படுத்தி கொண்ட, இருவரும், வாக்கமூலமளித்துள்ளர் என குற்றப்புலனாய்வு பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

பிரபாகரனின் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணங்கள், கோத்தாபயவின் கணக்கிலேயே சேர்க்கப்படுகின்றது. என்றும் ராஜிதவே, தங்கள் இருவருக்கும் சொல்லிக்கொடுத்தார் என்றும் அவ்விருவரும் தங்களுடைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனால், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் கைதுசெய்யப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.