Print this page

MCC ஒப்பந்தம் இடைநிறுத்தம்

December 19, 2019

மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (mcc) ஒப்பந்தம் தொடர்பிலான இதர நடவடிக்கைகளை கைவிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல்கள் திணைக்களத்தன் கேட்போர் கூடத்தில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும், வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்துரைத்து கொண்டிருக்கின்றார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு, நால்வர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.