Print this page

சம்பிக்கவின் பிணை நிராகரிப்பு: 24 வரை விளக்கமறியல் தாக்குதலால் பதற்றம்

December 19, 2019

முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் விளக்கமறியல், எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரது தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு கைதுசெய்யப்பட்டு, இன்றுவரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்றுக்காலை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.

Last modified on Friday, 20 December 2019 05:28