Print this page

கையை வைத்த மஞ்சுலவுக்கு பிணை

December 19, 2019

 

கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் பெவத் பெரேராவின் மகன் மஞ்சுள பேரேரா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை, நீதிமன்றத்தில் இன்று (19) ஆஜர்படுத்திய போது, ஊடகவியலாளர் ஒருவரை தாக்கினார் என்றக் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

வழக்கு விசாரணைக்குப் பின்னர், சம்பிக்கவை சிறைச்சாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது, தாக்குதல் நடத்தினார் என, ஊடகவியலாளர் முறைப்பாடு செய்துள்ளார்.