Print this page

விமானப்படை அதிகாரியிடம் யாழில் கைவரிசை

December 20, 2019

பலாலி ராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாக பணியாற்றும் அதிகாரியிடம், யாழ்ப்பாணம் மர்ம கும்பல் கைவரிசையை காட்டி உள்ளது.

அந்த அதிகாரி, தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான பொலன்னறுவை செல்வதற்காக, முச்சக்கர வண்டியில் இன்று அதிகாலை பயணித்து கொண்டிருந்தார்.

அந்த முச்சக்கர வண்டியை ஊரெழு பகுதியில் வைத்து இடைமறித்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் அவர்களிடமிருந்து நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.