Print this page

பாயில் படுக்க இயலாது: அடம்பிடிக்கிறார் சம்பிக்க

December 20, 2019

விளக்கமறியல் உத்தரவுக்குப் பின்னர், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செய்யப்பட்டார்.

அங்கு அவருக்கு படுப்பதற்கு பாய் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தனக்க மெட்ரஸ் வழங்குவதற்கு பணிக்குமாறு, சிறைச்சாலை வைத்தியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறை கூண்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டதன் பின்னர், அவருக்கு பாய், கோப்பை மற்றும் பீங்கான் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

வெளியிலிருந்து  ஒரு உறை கொண்டு வரவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர், சிறைச்சாலையில் ”எம்” கூடத்திலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த சிறைக்கூடு, மாலை 5 மணிக்கு மூடப்பட்டு, மறுநாள் கலை 6 மணிக்கே திறக்கப்படும்.