Print this page

தப்பியோடினார் மங்கள

December 20, 2019

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர், வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்  என அறியமுடிகின்றது.

எனினும், அவர் தப்பியோடவில்லை. ஜனவரி இறுதியில் மீண்டும் நாடு திரும்புவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணி தோல்வியடைந்தது. இந்நிலையில், மிகவிரைவில், வெளிநாட்டுக்கு சென்றுவிடுவேன் என, தன்னுடைய நெருக்கமானவர்களிடம் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.