Print this page

முந்திய ராஜிதவுக்கு முகம் சுருங்கியது

December 20, 2019

வௌ்ளைவேன் சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்த முன்பினை கோரிக்கை, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால், தள்ளுப்படி செய்யப்பட்டது.

தன்னை கைதுசெய்வது எந்த உறுப்புரையின் கீழ், எந்த குற்றச்சாட்டின் கீழ் என்பது தொடர்பில் அந்த முன்பினை மனுவில் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் சத்தியக் கடதாசியிலும் அவை தொடர்பில் விளக்கமளிக்கப்படவில்லை. ஆகையால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய வெள்ளை வான் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு பொலிஸார் தயாராகி வருவதால் முன்பிணை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.