Print this page

வெலிக்கடை சென்ற ரணில் இந்தியா பயணம்

December 21, 2019

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.

அவரிடம் நலன் விசாரித்த ரணில், சிறைச்சாலை அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். ரணிலுடன் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனும் சென்றிருந்தார்.

இந்நிலையில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளார்.

இந்தியாவில், அவர் சில நாட்கள் தங்கியிருப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last modified on Saturday, 21 December 2019 03:49