Print this page

திக் திக்னு இருப்பதாக ராஜித புலம்புகிறார்

December 23, 2019

முன்பிணை கோரி சமர்ப்பித்த இரண்டாவது மனு, இன்று ஆராயப்படவுள்ள நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு வருகைதந்தார்.

தான், தாக்கல் செய்திருந்த முதலாவது முன்பிணை மனு, நிராகரிக்கப்பட்டது. அன்றையதினமே, இரண்டாவது முன்பிணை மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.

நீதமன்றத்துக்கு வருகைதந்திருந்த அவர், “எனக்கு என்னமோ, திக்,திக்னு இருக்கிறது” என சகபாடிகளிடம் கொஞ்சம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.

இரண்டாவது முன்பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டால், ராஜித சேனாரத்ன, பெரும்பாலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.