Print this page

வெலிப்பென்னயில் கோரம் 4 பேர் பலி

December 23, 2019

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தொன்றில் நால்வர் பலியாகியுள்ளனர்

வெலிப்பென்ன பகுதியிலேயே இந்த விபத்து சம்பவத்திவுள்ள 

வெலிப்பென்ன குருதுகஹ ஹேனேக்ம பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு பயனித்த வேனும், கனரக வாகனமொன்றும் ஒன்றுக்கொன்று  மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. 

சம்பவத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர் என தெரிவித்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலியானவர்களில் வெளிநாட்டவர்கள் மூவரும் அடங்குகின்றனர். காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

Last modified on Monday, 23 December 2019 17:11