Print this page

மல்லியப்பு சந்தியில் சத்தியாக்கிரகம்


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, ஹட்டன், மல்லியப்பு சந்தியில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டிக்கோயா, என்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 57 வயதான நபரொருவரே இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

1,000 ரூபாவை பெற்றுத்தருவதாகக் உறுதியளித்திருந்த தொழிற்சங்கங்கள், அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாவை பெற்றுக்கொடுத்துள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், உறுதியளிக்கப்பட்ட சம்பளத்தை பெற்றுத்தருமாறே, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் தெரிவித்துள்ளார்.