Print this page

சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு சிறை

December 24, 2019

பலவந்தமாக இன்னொருவருக்கு கட்டிக்கொடுத்தார்

அவரை விரட்டிவிட்டு, சிறுமியை வைத்துகொண்டார்

சிறுமிக்கு பிறந்த குழந்தையை விற்றுவிட்டார்.  

 

தனது மனைவியின் முன்னாள் கணவனுக்குப் பிறந்து, ஆளாகியுள்ள சிறுமியை, ஒவ்வொருநாளும் வன்புணர்ந்து, கர்ப்பிணியாக்கினார் என குற்றச்சாட்டப்பட்டிருந்த அந்த சிறுமிக்கு சித்தப்பா முறையானவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நபருக்கு 20 வருட கடூழிய சிறைதண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் தண்டமும் 5 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பலாங்கொடை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அவருக்கு கடூழிய சிறை தண்டனை விதித்து  உத்தரவிட்டார்.

சந்​​தேகநபர், வழக்கு விசாரணை ஆரம்பத்திலிருந்து நிறைவடையும் வரையிலும் நீதிமன்றத்துக்கு தலைமறைவாகியே இருந்துள்ளார். பிரதிவாதி இல்லாமலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

முறைப்பாட்டாளரின் குற்றச்சாட்டுகள் எவ்விதமான சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளமையால், அவருக்கு கடூழிய சிறைத்தண்டனையை விதிப்பதாக நீதிமன்றத்துக்கு நீதிபதி அறிவித்தார்.

2005 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதிக்கும் ​அதேயாண்டு 30ஆம் திகதிக்கு இடைப்பாட்ட காலத்தில் இரத்த உறவான, தன்னுடைய ஆகவும் வயது துறைந்த உறவுமுறையான சிறுமியை ஒவ்வொரு நாளும் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என அவருக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல்​செய்யப்பட்டிருந்தது.

சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர், திறந்த நீதிமன்றுக்கு, விசேட அறிவிப்பொன்றை நீதிபதி விடுத்தார்.

குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர், கல்விக்கற்பதற்கு மிகவும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் இருந்த 13 வயதான சிறுமியையே, சந்தேகநபர் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

அந்த சிறுமியை அச்சுறுத்தி ஒவ்​வொருநாளும் வன்புணர்வு உட்படுத்தியுள்ளார். அந்த சிறுமி கர்ப்பம்  தரித்ததன் பின்னரும், அதே செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து சென்றுள்ளார்.

அதன்பினர், அப்பாவி இளைஞர் ஒருவருக்கு பலவந்தமாக அச்சிறுமியை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.  அதன்பின்னர், அந்த இளைஞனை விரட்டியடித்துவிட்டு, சிறுமியை தனது பொறுப்பின் கீழ், கொண்டுவந்து, தொடர்ச்சியாக வன்புணர்ந்துள்ளார்.

சிறுமி குழந்தையை பிரசவித்ததன் பின்னர், அந்தக் குழந்தை விற்றுள்ளார். அதன்பின்னர், சிறுமியை வன்புணர்ந்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை பிறந்ததன் பின்னர், பாடசாலைக்கு சென்ற அந்த சிறுமி, கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரையிலும் கல்விக்கற்றுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில், வழக்கு விசாரணையின் சாட்சிகளின் பிரகாரம், அந்த குழந்தைக்கு தந்தை வெ​று எவருமல்ல. சந்தேகநப​​ரே தந்தையாவார் என நிரூபனமாகியுள்ளது என நீதிமன்றுக்கு அறிவித்தார்.  

அதன்பின்னர், இருதரப்பு முடிவுரைகளுக்குப் பின்னர், குற்றவாளிக்கு மேற்கண்ட தண்டனையை விதித்ததுடன், குற்றவாளியை கைது செய்து, 2020.01.29 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு திறந்த பிடியாணையை பிறப்பித்தார்.