Print this page

சாரதி சரண்: சம்பிக்கவுக்கு பிணை

December 24, 2019

முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் சாரதி, துசித்த குமார, தன்னுடைய சட்டத்தரணியின் ஊடாக நீதிமன்றத்தின் சரணடைந்தார்.

இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில் சரணடைந்த அவர், ஜனவரி 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு இன்றுகாலை பிணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.