Print this page

சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம்

December 24, 2019

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம், பெப்ரவரி 4ஆம் திகதியன்று, கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில், இதுதொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தின் போது, சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தை பாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையின் சுதந்திர தின வைபவங்களில், 2016ஆம் ஆண்டு மட்டுமே, சிங்கள, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின வைபவத்துடன், நாடளாவிய ரீதியில் மரக்கன்றுகளை நாட்டும் வைபவமும் முன்னெடுக்கப்பட உள்ளது என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.