Print this page

பிடியாணையில் ராஜிதவை பிடியுங்கள்

December 24, 2019

 

பிடியாணை பெற்று, முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு பணித்துள்ளார்.

வௌ்ளைவான் விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் கீழ், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே ராஜிதவை கைது செய்வதற்கான பணிப்புரையை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கியுள்ளது.