Print this page

கொட்டகலை விபத்துகளில் மூவர் காயம்

கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் மூவர் காயமடைந்த நிலையில், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற வேன் ஒன்று இன்று மதியம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது, விபத்துக்குள்ளான லொறி அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் வேனில் பயணித்த இளைஞர் ஒருவர் மாத்திரம் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் பேரூந்து தரிப்பு நிலையத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

அதில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Last modified on Saturday, 26 January 2019 13:05