Print this page

புத்தர் மீது கையை வைத்த 31 பேருக்கு சிக்கல்

December 27, 2019

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். 

மாவனெல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திய விவகாரம் குறித்த வழக்கு, எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்குடன் தொடர்புடைய 31 சந்தேகநபர்கள் நேற்று (26) மாலை மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

அத்துடன், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 29 சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உபுல் ராஜகருணா உத்தரவிட்டார். 

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.