Print this page

தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்


தம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரொருவர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நபரொருவரை தாக்கி காயமடைய செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ப்ரியரஞ்சன குமார என்ற பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

கடந்த 17ஆம் திகதி இரவு சீகிரியா - கலாபுர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் சீகிரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இதன்போது குறித்த பிரதேச சபை உறுப்பினர் மேலும் சிலருடன் பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.