Print this page

சிலுவை பிடித்து இழுத்து தேரர் அட்டகாசம்

 

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதனத் தேரர் கிறிஸ்தவ துறவி ஒருவரை வழிமறித்து தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் அம்பாறையில்  இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் குழப்பநிலை தோன்றியுள்ளது.

குறித்த கிறிஸ்தவ துறவி மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணித்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அம்பிட்டிய சுமனரதனத் தேரர், நில் நில் நீ எப்படி பொலிஸ் முன்னால் வண்டியில் ஏறி போவாய்? உனக்கு என்ன மரியாதை தர வேண்டி இருக்கின்றது? இறங்கு இறங்கி போய் பேசு போன்ற மரியாதையற்ற வார்த்தை பிரயோகத்தை கிறிஸ்தவ துறவிக்கு எதிராக மேற்கொண்டுள்ளார்.

Last modified on Saturday, 28 December 2019 01:59