Print this page

வைரலாகிறது கோத்தாவின் செல்பி

December 28, 2019

கடமை நேரத்தில், அலுவலகத்தில் தன்னுடைய மேசையின் மீது படுத்து உறங்கும் அரச ஊழியர் ஒருவருடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செல்பி ஒன்றை எடுத்துகொண்டுள்ளார்.

 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்களுக்கு அதிரடி விஜயத்தை மேற்கொண்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவருகிறார்.

நாரஹேன்பிட்டியவிலுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு திடீரென விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோத்தா, அரிசி விலைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அதன்பின்னர், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு சென்றார்.

இந்நிலையில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்திற்கு திடிரென விஜயம் செய்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

திரும்பும் வழியில்,  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கும் திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

எவ்விதமான முன்னறிவுப்புகளும் இன்றி, ஜனாதிபதி விஜயம் செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதனால், சில நிறுவனங்கள், திணைக்களங்கள் உஷார் நிலையிலேயே எப்போதும் இருக்கின்றன.

இதற்கிடையில், இன்னும் சில நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமலே இருக்கின்றன.

அவ்வாறான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கடமை நேரங்களில் தூங்குவதையும் கைவிடவில்லை.

கடமை நேரத்தில், அலுவலகத்தில் தன்னுடைய மேசையின் மீது படுத்து உறங்கும் அரச ஊழியர் ஒருவருடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செல்பி ஒன்றை எடுத்துகொண்டுள்ளார்.

அந்த செல்பி தற்போது வைரலாகி வருகின்றது.