Print this page

ராஜிதவின் வலது கை ச​ரண்

December 31, 2019

வௌ்ளைவான் சர்ச்சை தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வலது கையாக செயற்பட்டவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்யி மொஹமட் ரூமி மொஹமட் அசீம் என்பவரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.

இவரே, வௌ்ளைவான் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார் என்றும், அதற்காக 20 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக கொடுத்தார் என்றும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின்றி வெ ளிநாடுகளுக்குச் செல்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, நேற்று (30) உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Thursday, 02 January 2020 17:08