Print this page

வாசலில் படுத்தது பஸ்: 10 பேர் காயம்

December 31, 2019

தனியார் பஸ்ஸொன்று வீட்டின் முற்றத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளான போது, முற்றத்தில் யாரும் இல்லாமையால், எவ்விதமான உயர்ச் ​​சேதங்களும் இடம்பெறவில்லை.

இந்த சம்பவம் மாவனெல்லையில் இன்று (31) காலை 8.15க்கு இடம்பெற்றது. இந்த விபத்தில், 10 பேர் காயமடைந்தனர்.

மாவனெல்லையிலிருந்து ஹெம்மாத்தகமவை நோக்கி பயணித்துகொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, கும்புல்கம பிரதேசத்தில், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

வீட்டின் முற்றத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளனது. முற்றத்தில் யாரும் இல்லாமையால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.