Print this page

மகனை காப்பாற்ற முயன்ற தந்தை கைது

தன்னுடைய மகனை காப்பாற்றுவதற்கு முயற்சித்த அவருடைய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அக்குரஸ்ஸ பொலிஸில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டு, சிறைக்கூண்டில் வைக்கப்பட்டிருந்த தன்னுடைய மகனை மீட்பதற்கு, அந்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு, ஐந்தரை இலட்சம் ரூபாயை இலஞ்சமாக கொடுக்க முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அவருடை தந்தை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.