Print this page

அணிவகுப்பை நிறுத்தினார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோத்தாபயவுக்கு இராணுவ மரியாதையுடன் கூடிய அணிவகுப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, ஒத்திகையும் பார்க்கப்பட்டது. எனினும், இறுதிநேரத்தில், அந்த அணிவகுப்பை அவர் நிறுத்திவிட்டார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்காக, வருகைதரும் ஜனாதிபதிக்கு, 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு,  இராணுவ மரியாதை அணிவகுப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்​தொடர், ஜனாதிபதியால் நாளைக்காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.