Print this page

ஆசனத்தை மறுத்தார் ரணில்

பாராளுமன்றத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தை மறுத்த ரணில் விக்கிரமசிங்க, முன்வரிசையிலேயே பிரிதொரு ஆசனத்தை ஒதுக்கித்தருமாறு கோரியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளமையால், அவருக்கு அருகிலேயே ரணிலுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டது. சிரேஷ்ட உறுப்பினர்களின் பிரகாரமும் சம்பிரதாயத்தின் பிரகாரமுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும், சஜித்துக்கு அருகில் ஒதுக்கப்பட்ட ஆசனத்தை மறுத்த ரணில், அதேவரிசையில் 9 ஆவது ஆசனத்தை பெற்றுக்கொண்டார். ரணிலுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 7ஆம் இலக்க ஆசனம், லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தரப்பில் முதலாவது வரிசையில் முதலாவதாக ​ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அதன்பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், அதற்கடுத்து ஜே.வி.பியின் உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய அடுத்த அமர்வு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், இன்றுப் பிற்பகல் 1 மணிக்கு கூடும். இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர், ஆளும், எதிர்க்கட்சி கொறடாக்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.