Print this page

முதலாவது நாளன்றே ஒருவர் பாய்ந்தார்

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டு, இரண்டாவது அமர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில், புதிய உறுப்பினராக உதகம லியனகே வருண பிரியந்த லியனகே,சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இரத்தினபுரி மாவட்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டார்.

பட்டியலில், அடுத்ததாக இருந்த வருண பிரியந்த லியனகே, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ரஞ்சித் சொய்சா, மஹிந்த அணியைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால், புதிய உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்,எதிரணியில் அமர்ந்துகொண்டார்.

Last modified on Saturday, 04 January 2020 01:50