Print this page

2 அமைச்சர்களை நீக்கவும்


அடுத்த வரவு-செலவுத் திட்டத்துக்கு (பட்ஜெட்) முன்னர், அமைச்சர்கள் இருவரை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு வருகைதந்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிவகித்துவரும் அமைச்சர்களான திலக்மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியயோரை அப்பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக, ரங்கே பண்டார போன்றவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்கவேண்டும் என்றும் பின்வரிசை எம்;.பிக்கள் கோரியுள்ளனர்.