Print this page

ஜனாதிபதி குறித்து பொய் சொன்னவர் கைது

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரை விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா வீரகுல பிரதேசத்தில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர், ஜனாதிபதி கோத்தாபயவின் கீழ் சேவையாற்றும் பொலிஸ் பரிசோதகர் என போலியான முறையில் தன்னை அறிமுகப்படுத்திகொண்டு, ஜேர்மனியில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி, நபரொருவரிடம் 24ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார். 

ஆனால், அந்த சந்தேகநபர் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றுகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர், கடந்த டிசெம்பர் மாதம் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்தார் எனவும், அவருடைய வங்கிக் கணக்கில் அந்தத் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. 

 

பணத்தை கொடுத்த முறைப்பாட்டார் தொலைபேசியை அழைப்பை ஏற்படுத்தும் போது, தான் ஜனாதிபதியுடன் இருக்கின்றேன் என்றும் இல்லையேல், ஜனாதிபதி கொழுப்பு வெளியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

பலமுறை இவ்வாறு செய்தமையால் சந்தேகம் கொண்ட அந்த நபர், மேல்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். 

அதனையடுத்தே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.