Print this page

“தைலம்”சாப்பிட்ட சிறுவன் மரணம்

 உடல் வலிக்கு தடவும் தைலத்தை சாப்பிட்ட ஒன்றரை வயதான சிறுவன் உயிரிழந்தமை மட்டக்களப்பு  தம்பலாவத்தை கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.

ஹரிகரன் துசேன் எனும் ஒரு வயதும் 8 மாதமுடைய சிறுவனே இவ்வாறு மரணமடைந்தது.

உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை, கடந்த முதலாம் திகதி மாலை குறித்த சிறுவன் சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் மயக்க நிலைக்கு உள்ளான நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தான்.

மட்டக்களப்பு மாவட்டம் தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவனின் தந்தை பணி நிமித்தம் வளைகுடா நாடு ஒன்றில் பணி புரிந்து வருகின்றார்.

சிறுவனின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அன்றைய தினம் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.