Print this page

விமல் மனைவியுடன் ரஞ்சனுக்கு நெருக்கம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவுக்கும், ​ஐக்கிய ​தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் பேணப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

அவ்விருவரும் மிக நெருக்கமாக, தொலைபேசியில் உரையாகும் ஒலிப்பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவை விமல் வீரவன்ச பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், விமலின் மனைவி ஷசி வீரவன்ச. ரஞ்சனுடன் நெருக்கமாக உரையாடுவது எதற்கென பலரின் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

முக்கிய நபர்களுடன், ரஞ்சன் ராமநாயக் தொலை​பேசியில் உரையாடியமை தொடர்பிலான பதிவுகள் அடங்கிய சி.டீக்கள், பொலிஸாரினால் அண்மையில் கைப்பற்றப்பட்டது.

அதில், விமலின் மனைவியுடன் உரையாடுவதும் உள்ளது.

“தான் உங்களை எப்போதும் பாதுகாப்பேன்” என விமல் வீரவன்சவின் மனைவி, ரஞ்சன் ராமநாயக்கவிடம் கூறுவது, தொலைபேசி ஒலிப்பதிவில் உள்ளது.

Last modified on Monday, 13 January 2020 00:53