Print this page

கன்னியின் மார்பு கச்சையை ரஞ்சன் கலற்றிவிட்டார்

நல்லாட்சி என்னும் பெயர் காட்டுச் சட்டத்தை முன்னெடுத்திருந்த அன்றைய அரசாங்கத்தின் இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, சட்ட கன்னியின் மார்பு கச்சையை கழற்றிவிட்டார் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் முதலாவது ​உரை மீதான இன்றை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பட இறுவட்டுகள் அம்பலமானதை அடுத்து, ஐக்கிய ​தேசியக் கட்சியைச் சேர்ந்த பலரின் மார்ப்பு கச்சை பட்டிகளும் கலன்று வெளியில் தெரிய தொடங்கிவிட்டன என்றார்.