Print this page

“சிறிகொத்தாவில்” 16 ஆம் திகதி வாக்களிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பிலான தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது. 

அன்றையதினம், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 

கட்சியின்  தலைமைத்துவ பதவிக்கு, முன்னாள் பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரே இவ்வாறு போட்டியிவுள்ளனர்.