Print this page

துப்பாக்கி பிரயோகத்தில் மகள் பலி

இனந்தெரியாத நபர்களினால், வீட்டுக்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோத்தில் 22 வயதான மகள் மரணமடைந்துள்ளார். அவருடைய தாய் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம், வரக்காபொல, கனிகம என்னுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது.