Print this page

ரஞ்சனுக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் முன்னிலையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்றுப்பிற்பகல் கைதுசெய்யப்பட்ட அவர், இன்று பிற்பகல் வரையிலும் தடுத்துவைத்து  விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர், ஆஜர்படுத்தப்பட்டார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் நீதவான் உள்ளிட்ட முக்கிய தரப்பினருக்கும் இடையி்ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் தொடர்பில்,  ஊடகங்களில் செய்திகள் வெ ளியாகியிருந்தன. 

 

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தலையீடு செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட அவர், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.