Print this page

ரணிலா? சஜித்தா உள்வீட்டில் கடும் வாய்ச்சண்டை

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கான தீர்மானமிக்க கூட்டமொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது.

கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டுமென, ஒருதரப்பினரும், 25 வருடங்களாக கட்சியை கட்டிக்காத்த ரணிலே, தலைவராக இருக்கவேண்டுமென மற்றுமொரு தரப்பினரும் கடுமையான வாக்குவாதங்களை முன்வைத்துள்ளனர் என உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை, கட்சியின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று ரணிலுக்கு எதிரான  தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், இன்று மாலை 5.45க்கு ஆரம்பமான கூட்டம், நீண்ட நேரத்துக்குப் பின்னரே நிறைவடையும் என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last modified on Sunday, 19 January 2020 12:26