Print this page

ரஞ்சனை பார்க்க யாரும் செல்லவில்லை

விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்கு விசேட பிரமுகர்கள் எவரும் செல்லவில்லை என சிறைச்சாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர், கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபரான ரஞ்சன் ராமநாயக்கவை, சட்டத்தரணிகளை மட்டுமே சந்திப்பதற்கு வந்துள்ளனர்.

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எவரும், சிறைச்சாலைக்கு வருகைதரவில்லை. 

இதனால், சந்தேகநபரான ரஞ்சன் ராமநாயக்கவை, விசேட பிரமுகர்கள் சந்திக்கும் இடத்துக்கு அழைத்துவரவேண்டிய தேவை இருக்கவில்லை என அறியமுடிகின்றது.