Print this page

வடக்கில் 292 பேருக்கு நியமனம்


வடமாகாணத்தில் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் ஏற்பட்டிருந்த வெற்றிடங்களுக்காக, புதிய அரச அதிகாரிகளாக, பட்டதாரிகள் 292 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனம், யாழ்ப்பாணம். வேம்படி கல்லூரியில் வைத்து, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் இன்று (27) நடைபெற்றது.

அந்த 292 பேரில், பட்டதாரி ஆசிரியர்கள், அரச நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப அலுவலர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரும் அடங்குகின்றன.

'இவ்வாறு நியமனங்களை பெற்றுக்கொண்ட சகலரும் இன,மத வேறுபாடுகளின்றி பணியாற்றவேண்டும். ஐக்கியமாக பணியாற்றவேண்டும். குறிப்பாக பிள்ளைகளுக்கு கைவினையை கற்பிப்பதன் ஊடாக, பிள்ளைகளுக்கு ஒரு தத்துவஞானியை ஆசிரியர்களால் பார்க்கமுடியும்' என்றார்.