Print this page

ஐ.தே.க இரண்டாக பிளவுபடும் அபாயம்

இன்று நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தினை பகிஷ்கரிக்க சஜித் ஆதரவு எம்பிக்கள் தீர்மானித்துள்ளனர்.

சஜித் ஆதரவு எம் பிக்கள் சிலர் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

சஜித் ஆதரவு செயற்குழு உறுப்பினர்களான சுமார் 35 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்சத்தில் அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருப்பதால் எதிர்காலத்தில் அவர்கள் தனி வழி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.